ஆன்லைன் தேர்வுகளில் முறைகேடு: பல பொறியியல் இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு

இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல மாணவர்களின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.

ஆன்லைன் தேர்வுகளில் முறைகேடு: பல பொறியியல் இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகம்.
  • Share this:
கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அந்த மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர்களின் மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக அண்ணாப் பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு இளநிலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பிரத்தியேக மென்பொருள் உதவியுடன் ஆன்லைன் வழியாக செமஸ்டர் தேர்வுகளை கடந்த செப்டம்பர் 24-ம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றன.

இதில் தேர்வுக்குரிய விதிமுறைகளை பின்பற்றி  பல மாணவர்கள் தேர்வுகளை எழுதாமல் முறைகேட்டில் ஈடுபட்டதன் காரணமாக முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த மாணவர்களுக்கான மறு தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இறுதியாண்டு பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகளை 1,15,000 மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading