அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு தரத்தில் உயர்த்த நடவடிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு பல்கலைக்கழகமாக உயர்ந்த தரத்தில் புதிய துணைவேந்தர் உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.

  • Share this:
அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு தரத்தில் உயர்த்தி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், அண்ணா பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள வேல்ராஜ், தமிழ்நாடு முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ் பதவியேற்பிற்கு முன்பாக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதோடு, கல்வி ஆற்றலையும் அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

Also Read:  நான் போராட வரவில்லை என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தேன் -  முன்னாள் அமைச்சர்  வளர்மதி

மேலும், Blended (கற்றல் கற்பித்தல்) முறையை புகுத்த வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிவித்த அவர், பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும், தொழில்கல்வி மற்றும் சமூக சேவைக்கான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என யோசனைகள் வைத்து கலந்து பேசியுள்ளதாக தெரிவித்தார்.

Also Read: கல்வி கண் தந்த காமராஜர் பெயரில் அரங்கேறிய அவலம்.. நிற்கதியாக நிற்கும் மாணவர்கள்

அதேப்போல், ஆராய்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என துணை வேந்தர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு பல்கலைக்கழகமாக உயர்ந்த தரத்தில் புதிய துணைவேந்தர் உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், புதிதாக பதிவியேற்க இருக்கும் துணை வேந்தர் வேல்ராஜ்க்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைவரும் கலந்துபேசி ஒற்றுமையான சூழலை அண்ணா பல்கலைக்கழகத்தில் உருவாக்க வேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கல்லூரிகளின் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், கல்லூரிகள் திறப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும் என்றார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: