Home » News » Tamil-nadu » ANNA UNIVERSITY HAS SOUGHT PERMISSION FROM THE GOVT OF TN TO CONDUCT ARREAR EXAMINATIONS VIN GEE

அரியர் தேர்வு நடத்த அரசிடம் அனுமதி கேட்கும் அண்ணா பல்கலைக்கழகம்

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் போதும் அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்யும் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரியர் தேர்வு நடத்த அரசிடம் அனுமதி கேட்கும் அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்.
  • News18
  • Last Updated: December 1, 2020, 4:52 PM IST
  • Share this:
தேர்வு வைக்காமல் அரியர் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்ததால் அரியர் தேர்வுகளை நடத்துவதற்கு தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி கோரியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களை நேரடியாக கல்லூரிகளுக்கு வரவழைத்து தேர்வுகளை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் பொருட்டு இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்தியுள்ள மற்ற ஆண்டுகளில் பயிலக்கூடிய  அனைத்து அரியர்  மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து  இதுகுறித்து  அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டது. அதற்கு விளக்கமளித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தேர்வு வைக்காமல் அரியர் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தது.


Also read... #Burevi Cyclone | 'மக்கள் பாதிக்கப்படக்கூடாது, சிரமப்படக்கூடாது' - அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிச்சாமி உத்தரவு..



மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் போதும் அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்யும் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த அனுமதி வழங்குமாறு கோரியுள்ளது.
First published: December 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading