அண்ணாப் பல்கலைக்கழகம் வழக்கம்போல செயல்படும்! பதிவாளர் அறிவிப்பு

தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்ணாப் பல்கலைக்கழகம் வழக்கம்போல செயல்படும்! பதிவாளர் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: November 9, 2019, 9:15 AM IST
  • Share this:
அண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் வழக்கம்போல நடைபெறும் என்று பதிவாளர் கருணாமூர்த்தி அறிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அக்டோபர் 16-ம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று காலையில் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகள் குறித்து தெரிவித்த பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி, ‘அயோத்தி தீர்ப்பு குறித்து அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. இன்று பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும். செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...