Home /News /tamil-nadu /

கொரோனா வார்டில் மருத்துவர்களுக்கு உதவும் பிரத்யேக ரோபோ: அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைப்பு

கொரோனா வார்டில் மருத்துவர்களுக்கு உதவும் பிரத்யேக ரோபோ: அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைப்பு

ரோபோ

ரோபோ

மருத்துவர்களுக்கு உதவக்கூடிய வகையில் பிரத்யேக ரோபோ ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்து வழங்கியுள்ளது.

கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உதவக்கூடிய வகையில் பிரத்யேக ரோபோ ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்து வழங்கியுள்ளது.

AU MIT BOT என இந்த ரோபோ  பெயரிடப்பட்டுள்ளது wi-fi வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை 500 மீட்டர் தொலைவிலிருந்து இயக்க முடியும் இதனைக் கொண்டு நோயாளிகளின் உடல்நிலையை கண்காணிப்பது அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்வது கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ரோபோவை பயன்படுத்த முடியும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ,உணவு வழங்கிடவும் மருத்துவர்கள்,மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட நபர்களின் அருகில் அதிகம் செல்ல வேண்டியுள்ளது இதனால் அவர்களும் நோய் தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை உள்ளது.

இதனை தவிர்க்கவே பிரத்யேக ரோபோவை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி வளாகத்தில் உள்ள  ஆட்டோமொபைல் துறை, உற்பத்தியியல் துறை மற்றும் மின்னணு  தொடர்பியியல் துறையை சேர்ந்த குழுவினர் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர்.

பேராசிரியர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read... 20,000-ஐக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை, குணமடைந்த 11,313 பேர் - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு அப்டேட்






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி