அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்து கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய விசாரணை குழு உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்து கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய விசாரணை குழு உத்தரவு

துணைவேந்தர் சூரப்பா.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்து மேலும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கூறியுள்ளதாக விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழு தெரிவித்துள்ளது.

 • Share this:
  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு குற்றச்சாட்டு குறித்து விசாரணை அதிகாரி கேட்டிருந்த ஆவணங்களில் சிலவற்றை அதன் பதிவாளர் கருணாமூர்த்தி உள்ளிட்ட 6 அதிகாரிகள் நேரில் வந்து ஒப்படைத்தனர். மேலும் அந்த ஆவணங்களை விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழுவினர் சரி பார்த்தனர்.

  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பதிவாளருக்கு கடிதம் எழுதினோம். பதிவாளர் ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அவருக்கு சம்மன் அனுப்பி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தோம். அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். கூடுதல் ஆவணங்களை விசாரணை அலுவலகத்தில் நாளை சமர்ப்பிக்க அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை, பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 2018ம் ஆண்டு சூரப்பா நியமிக்கப்பட்ட பின், புதிய நியமனங்கள், அண்ணா பல்கலைக்கு உபகரணங்கள் வாங்கியது, பண பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் ஆவணங்களை நாளையும், இந்த வார இறுதியிலும் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளோம். நியமனங்கள் குறித்து சட்ட ரீதியாகவும், நியமனத்தின் விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளதா? எனவும் அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றும்.விசாரணை குழு தெரிவித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: