Home /News /tamil-nadu /

இன்ஜினியரிங் மாணவர்களுக்கான அரியர் தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்

இன்ஜினியரிங் மாணவர்களுக்கான அரியர் தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்.

அண்ணா பல்கலைக்கழகம்.

தனியார் கல்லூரிகளில் படித்து அரியர் வைத்திருக்கக்கூடிய மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரியர் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இறுதியாண்டு தவிர்த்து கட்டணம் செலுத்தி உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரியர் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். ஆனால் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் குழு (ஏஐசிடிஇ) எதிர்ப்பு தெரிவித்தன.
இதன் காரணமாக அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது.

இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது முதற் கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரி மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதையடுத்து தனியார் கல்லூரிகளில் படித்து அரியர் வைத்திருக்கக்கூடிய மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு கால அட்டவணை குறித்து மேலும் தகவல்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகளை திறப்பதற்கு மத்திய அரசு தளர்வுகள் அளித்ததன் காரணமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ந்தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அனைத்து இளநிலை, முதுநிலை வகுப்புகளும் பிப்.8ந்தேதி முதல் முழுமையாக திறக்கப்படும் எனவும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ந்தேதியும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5 ந்தேதியும் வகுப்புகள் தொடங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Anna University, Exam

அடுத்த செய்தி