Home /News /tamil-nadu /

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு 20-ம் தேதிவரை விடுமுறை

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு 20-ம் தேதிவரை விடுமுறை

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

anna university | அண்ணாப் பல்கலைக்கழகத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் 20-ம் தேதிவரை அண்ணாப் பல்கலைக்கழகம் விடுப்பு அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவருகிறது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அதன் ஒருபகுதியாக அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

    பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு வரும் 20ஆம் தேதி வரை விடுப்பு அறிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Anna University, Lockdown

    அடுத்த செய்தி