• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: செயலிகள், தொழில்நுட்பங்களின் பங்கு என்ன?

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: செயலிகள், தொழில்நுட்பங்களின் பங்கு என்ன?

ஆன்லைன் தேர்வுகள்

ஆன்லைன் தேர்வுகள்

கிராமப்புற மாணவர்கள் , கணினி வசதி இல்லாத ஏழை  மாணவர்களுக்கு  ஆன்லைன் முறை தேர்வு  கைகொடுக்குமா  என்கிற கேள்வி எழுந்துள்ளது.

  • Share this:
    அண்ணா பல்கலைக்கழகம்,திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு  பல்கலைகழகங்கள் மற்றும் அரசு,, தனியார் கல்லூரிகள் ஆன்லைன் வழியில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று  அறிவித்துள்ளன
    கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் வழக்கமான முறையில், மாணவர்களை நேரில் வரவழைத்து தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த மாதம் 31-ஆம் தேதி அறிவித்திருந்தார்.

    ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்களுக்கு சிக்கல் எழும் என்பதால் ஆன்லைன் முறையில் தேர்வு இருக்காது என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது  இந்நிலையில் தற்போது ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறுகின்றன.
    ஆன்லைன் தேர்வினை நடத்த ஒவ்வொரு விதமான வழிமுறைகளை பல்கலைக்கழங்கள்,கல்லூரிகள் கையாள இருக்கின்றன அதன்படி
    அண்ணா பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு நுட்ப முறையில் பிரத்யேக மென்பொருளை வடிவமைத்துள்ளது.



    சில இடங்களில் தேர்வு துவங்க ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இணையதளங்களில் வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படும் அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதி முடித்தவுடன் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில்  கல்லூரிகளில் நேரிடையாக   ஒப்படைக்க வேண்டும்.

    சில கல்லூரிகள் பிரத்யேகமாக மொபைல் செயலிகளை ஆன்லைன் தேர்வுக்காக வடிவமைத்துள்ளனர் அதன்மூலம்  தேர்வு முடிந்தவுடன் உடனடியாக விடைத்தாளை  ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யும் முறை கையாளப்பட உள்ளது.

    இவ்வாறு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றி ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது.இருப்பினும்  கிராமப்புற மாணவர்கள் , கணினி வசதி இல்லாத ஏழை  மாணவர்களுக்கு  ஆன்லைன் முறை தேர்வு   கைகொடுக்குமா  என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: