இந்த ஆண்டுக்கான வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் குடியரசுதின விழாவில் 8 பேருக்கு வழங்கினார். அதில், திருவொற்றியூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் பழைய குடியிருப்பு இடிந்து விழுவதற்கு முன்பாக குடியிருப்புவாசிகள் எச்சரிக்கை செய்து அனைவரையும் துரிதமாக வெளியேற்றிய தனியரசுக்கும் வழங்கப்பட்டது.
அரசு ஊழியர் பிரிவு :
1 . கடந்த நவம்பர் 11 ஆம் தேதி அன்று இயற்கை பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு உதவும் வகையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கீழ்ப்பாக்கம் கல்லறை வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்த உதய குமார் என்பவரை மனிதாபிமானத்தோடு தோள் மீது சுமந்து மூன்று சக்கர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
2. திரு மூ.ராஜீவ் காந்தி, இவர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் அடையார் கிராமத்தில் கடந்த நவம்பர் மாதம் போல் இந்த வட கிழக்கு பருவமழையின் போது சென்ட் பண்ணி மற்றும் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு நபர்களையும் இருபத்தி நான்கு மணி நேரமாகப் போராடி உயிருடன் காப்பாற்றியவர்.
3. அசோகன், வனக் கால்நடை மருத்துவர்.
பொதுமக்கள் பிரிவு :
4. முத்துகிருஷ்ணன், வைகை வடகரை சிவகங்கை மாவட்டம்.
5. மாஸ்டர் லோகித், புதுக்கோட்டை கிராமம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
6. சொக்கநாதன், வே. கள்ளிபாளையம் திருப்பூர் மாவட்டம்.
7. சுதா என்ற பேச்சியம்மாள், வே. கள்ளிபாளையம் திருப்பூர் மாவட்டம்.
Must Read : டெல்லி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழக ஊர்தி திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
8. மு.தனியரசு, திருவொற்றியூர் சென்னை. திருவொற்றியூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் பழைய குடியிருப்பு இடிந்து விழுவதற்கு முன்பாக குடியிருப்புவாசிகள் எச்சரிக்கை செய்து அனைவரையும் துரிதமாக வெளியேற்றுகிறது ஏற்படாமல் தடுத்து காப்பாற்றிய வீரர் செயலுக்காக 2022ஆம் ஆண்டிற்கான வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.