அண்ணா, கருணாநிதியின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது! மு.க.ஸ்டாலின் ஆவேசம்

ஏழை மக்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்த காலம் கருணாநிதி ஆட்சி காலம் தான்.

news18
Updated: August 7, 2019, 10:24 PM IST
அண்ணா, கருணாநிதியின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது! மு.க.ஸ்டாலின் ஆவேசம்
மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி
news18
Updated: August 7, 2019, 10:24 PM IST
சமூக நீதிக்கும், மாநில சுயாட்சிக்கும் அச்சுறுத்தல் வந்துள்ள நிலையில், இப்பொழுது தான் கருணாநிதி, அண்ணா நமக்கு தேவைப்படுகிறார்கள் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசினார்.

மறைந்த கருணாநிதியின் திருவுருவசிலைத் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முரசொலி செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, ’கருணாநிதி மகனாக நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று தந்தவர் மு.க.ஸ்டாலின். வேலூர் மக்களவைத் தொகுதியிலும் தி.மு.க வெற்றி பெறும். ஏழை மக்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்த காலம் கருணாநிதி ஆட்சி காலம் தான்.


2021-ல் மு.க.ஸ்டாலின் தான் தமிழ்நாட்டின் முதல்வர். அவரின் அரசியல் வியூகத்தின் மூலம் வெற்றியை தனதாக்கியவர். மாநில அந்தஸ்து கேட்டு நாங்கள் போராடி வரும் வேலையில் காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத போக்கை பாஜக மேற்கொண்டு வருகிறது. இதனை அனைவரும் எதிர்த்து போராட வேண்டிய நேரம் இது’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், ‘முதுமை காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி ஓய்வு எடுக்கும் போது முரசொலி, அண்ணா அறிவாலயம் போகலாம் என்று கேட்டால் அவர் கண்கள் விரியும். எழுத, பேச சொன்னால் அண்ணா என்று தான் கூறுவார். இந்தியாவில் எந்த ஒரு இயக்கத்திற்கும் இப்படி பட்ட தலைவர் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். சமூக நீதிக்கும், மாநில சுயாட்சிக்கும் அச்சுறுத்தல் காலம் தற்போது வந்துள்ளது. இப்பொழுது தான் கருணாநிதி, அண்ணா நமக்கு தேவைப்படுகிறார்கள்.

இடஒதுக்கீடு வேண்டாம் என கூறியவர்கள் இப்போது அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்த உடன் அதை விட்டு விட்டனர். உச்சக்கட்டத்தில் தற்போது காஷ்மீர் விவகாரம். பரூக் அப்துல்லா இந்த மேடையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இங்கு வர முடியவில்லை. காரணம் அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

Loading...

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது. இது தி.மு.க நிலைப்பாடு. உறுதியாக இதை எதிர்ப்போம். தேச பற்று பற்றி யாரும் எங்களுக்கு கற்று கொடுக்க வேண்டாம். தேசப்பற்று என்ற பெயரில் மதவாததத்தை பா.ஜ.க தூண்டுகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Also see:

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...