21 வயதில் மேற்படிப்பு, திருமணம், வாழ்க்கை திட்டம் என எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அரிய நோய் தாக்கி கண் பார்வை இழந்து விட்டார் அனிதா.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஆய்வகத்தில் 2011ம் ஆண்டு ஆய்வக தொழில்நுட்பனராக பணியில் சேர்ந்தார் அனிதா. பணியில் சேர்ந்த ஆறு மாதங்களில் நியூரோ ப்ருசிலோசிஸ் ( neuro brucellosis) எ ன்ற நோயால் பாதிக்கப்பட்டார்.
தோள்பட்டை வலி, கழுத்து வலி, அதீத வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளுடன் தொடங்கிய நோய், ஒரு மாதத்துக்குள் கண் பார்வையை பறித்து விட்டது.
ஏழு ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த அனிதா, பின் ப்ரெய்ல் மொழி கற்றுக் கொண்டு, கணினி செயல்பாடுகள் கற்றுக் கொண்டார். பார்வை இழந்த பிறகு சொந்த முயற்சியில் இளங்கலை வரலாறு முடித்து, பின் அக்குபஞ்சர் மருத்துவத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார். தற்போது உளவியலில் முதுநிலை பயின்று வருகிறார்.
2018ம் ஆண்டு அவர் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் மக்கள் ஆலோசகராக தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டார். தனக்கு அரசு நிரந்தர பணி வழங்க வேண்டும் என தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அவர் கோரிக்கை வைத்து வருகிறார்.
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக பணி புரிந்து வந்த அனிதா தான் பணி காரணமாகவே தனக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவதாக கூறுகிறார். மேலும் நிரந்தர பணி கிடைத்தால் தன் வாழ்க்கை மேம்படும் என்றும் தெரிவிக்கிறார். இந்த நோய், பொதுவாக கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கும் மிக அரிதாக மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவக் கூடும். மனிதர்களுக்கு கண் பார்வை இழப்பு உட்பட உடலின் எந்த பகுதியையும் தாக்கக் கூடும் என சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறை இயக்குநர் லக்ஷ்மி நரசிம்மன் கூறுகிறார்.
Also Read: திருநங்கையாக மாறிய மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர் - விருத்தாசலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
சமூக நீதி என்பது சமூக இயலாமைக்கு நீதி தருவது மட்டுமல்ல. உடல்ரீதியான இயலாமைகளுக்கும் நீதி வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாற்று திறனாளிகள் ஆணையரகமும், பணியிடங்களில் ஏற்படும் ஆபத்துக்கான இயக்குனரகமும் தலையிட வேண்டும். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சொல்லி தான் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்பே அரசு செய்யலாம் என்று டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் கூறுகிறார்.
தமிழக அரசாணை 151, இரண்டு ஆண்டுகள் தொகுப்பூதிய பணியில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என கூறுகிறது. இந்த அரசாணை அனிதாவுக்கு பொருந்தினால் அதை கண்டிப்பாக உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.