Home /News /tamil-nadu /

நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதா பெயரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சூட்ட வேண்டும் - உதயநிதி கோரிக்கை

நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதா பெயரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சூட்ட வேண்டும் - உதயநிதி கோரிக்கை

சட்டப்பேரவையில் இன்று தனது முதல் உரையை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனிதா பெயரில் அரியலூர் மருத்துவ கல்லூரி பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவதாத கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழக அரசு தேவையற்ற பொய் வழக்குகளை போட முயற்சிப்பதாக கோரி அமளியில் ஈடுபட்டு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் உரையை தொடங்கினார்.

    அப்போது, நாட்டிற்கு முன் மாதிரியாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது, பெரியார் நெஞ்சில் தைத்த முள் நீக்குவதற்காக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. உயர்கல்வியை பொறுத்தவரையில் இந்தாண்டு பத்து கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாக திகழும்.

    தமிழ்நாட்டின் தலையான பிரசனை நீட், அனிதா தொடங்கி பல மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்துள்ளனர், சுபஷிரி, மோதிலால், ஆதித்யா, கீர்த்தனா என 16 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கலைஞர், ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வராத நீட் தேர்வு கடந்த ஆட்சிககலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் நீட் தேர்வு வந்தது. ஆனால் திமுக ஆட்சியில் ராஜன் தலைமையில் குழு அமைத்து கருத்து கேட்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வு கட்சி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது, அனைத்து கட்சியினரும் பாதிக்கப்படுகின்றனர் , எனவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு ரத்து என்பது ஒரு இயக்கமாக முன்னெடுத்து சென்று அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீட் தேர்வு கட்சி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது, அனைத்து கட்சியினரும் பாதிக்கப்படுகின்றனர் , எனவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு ரத்து என்பது ஒரு இயக்கமாக முன்னெடுத்து சென்று அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைவரும் இணைந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம், நீட் ஒழிப்பு போராளி அனிதா பெயரை அரசு மருத்துவ கல்லூரிக்கு அரியலூருக்கு சூட்ட வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, TN Assembly

    அடுத்த செய்தி