மதிப்புமிக்க சென்னை ஐ.ஐ.டி நாய்களை இப்படி கையாளக் கூடாது- விசாரணைக்கு உத்தரவிட்ட விலங்குகள் நலவாரியம்

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நாய்களை ஒரே அறையில் அடைத்து வைப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து விலங்குகள் நல வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மதிப்புமிக்க சென்னை ஐ.ஐ.டி நாய்களை இப்படி கையாளக் கூடாது- விசாரணைக்கு உத்தரவிட்ட விலங்குகள் நலவாரியம்
நாய்கள் அடைத்துவைக்கப்படும் பகுதி
  • Share this:
சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சேர்ந்த காருண்யா என்கிற அறக்கட்டளைக்கு ஐ.ஐ.டி வளாகத்திற்குள் சிறிய இடம் ஒதுக்கி வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த நாய்களை பிடித்து அங்கு ஒரே கூடாரத்தில் அடைத்து வைத்து பராமரிக்க அனுமதி அளித்தது. வளாகத்திற்குள் பிடிக்கப்படும் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வளாகத்திற்கு வெளியே வேறு இடங்களில் நாய்கள் விடப்படுவதாகவும் வளாகத்தில் உள்ள பூனை, நாய்களுக்கு யாரையும் அனுமதிப்பதில்லை என்ற புகாரின் அடிப்படையில் தற்போது இந்திய விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐ.ஐ.டி மீது வைக்கப்பட்ட புகார் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர், தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய செயலர் உறுப்பினர், மாநகர காவல் ஆணையாளர், இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்புனர் அஞ்சலி மேனன் ஆகியோர் கொண்ட குழு ஐ.ஐ.டியில் நேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாய்களை ஒரே இடத்தில் அடைப்பது விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு விதிகள் 2001க்கு எதிரானது. ஐ.ஐ.டி போன்ற மதிப்பு மிக்க அமைப்பு விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மீற கூடாது என இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading