நீலகிரியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி வன விலங்குகள் உயிரிழப்பு...!

நீலகிரியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி வன விலங்குகள் உயிரிழப்பு...!
உயிரிழந்த வன விலங்குகளுள் ஒன்று
  • Share this:
நீலகிரி மாவட்டம், சிங்காரா மின் நிலையத்திலிருந்து கேரள மாநிலத்தில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு மின்சாரம் கொண்டுசெல்லப்படும் வழியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஒரு யானை மற்றும் 5க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளும் பறவைகளும் உயிரிழந்தன.

வனப்பகுதியில் உள்ள மின்வழிப்பாதையில் பொறுத்தப்பட்டிருந்த பீங்கான்கள் வெடித்து சிதறியதாகக் கூறப்படுகிறது. அப்போது உயர் அழுத்த மின்சாரம் தரையில் பாய்ந்ததில் அப்பகுதியில் உள்ள புற்கள் கருகியதோடு, விலங்குகளும் உயிரிழந்திருக்கின்றன.

பழுது ஏற்பட்ட சிறிது நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது துர்நாற்றம் வீசவே அருகில் சென்று பார்த்தபோது வன விலங்குகள் உயிரிழந்தது தெரியவந்திருக்கிறது.


இது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see:
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading