Home /News /tamil-nadu /

மறைந்த எஸ்.பி.பியின் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் நேரில் சென்று அஞ்சலி

மறைந்த எஸ்.பி.பியின் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் நேரில் சென்று அஞ்சலி

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை சூளைமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து அவரது கோடம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் 11 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

    தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். ஆந்திர மாநில அரசின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் அனில்குமார் நேரில் சென்று எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.



    இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், இயக்குநர் அமீர் உள்ளிட்டவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி