ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

EXCLUSIVE: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் மணல் - சினிமாவை மிஞ்சும் பின்னணி!

EXCLUSIVE: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் மணல் - சினிமாவை மிஞ்சும் பின்னணி!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கடந்த ஆட்சியில் எம் சாண்ட் விற்பனைக்கு முன்னாள் அமைச்சர்களின் கல் குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு பல்லாயிரம் கோடி மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

தமிழத்தில் மணல் விற்பனைக்கு தடை  விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆந்திர மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக தமிழக எல்லைகளுக்கு மணல் கடத்தல் அரங்கேறி வருகின்றது.

தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டில் இருந்து மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. மணல் விற்பனையில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதால் 2017ம் ஆண்டில் தமிழக அரசு  மணல் விற்பனை தொடர்பாக TN Sand செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி மூலம் டன் கணக்கில் மட்டுமே மணல் பெற முடியும் என்பதால் சாமானிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே எம் சாண்ட் எனப்படும் மணலை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக மணல் விற்பனை கிடப்பில் போடப்பட்டது. தற்போது தமிழகத்தில் மணல் விற்பனை நடைபெறாததால், ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு  மணல் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவள்ளூர் மாவட்டம் எளவூர் சோதனைச் சாவடியை கடந்து ஆந்திர மாநிலத்திற்குள் நுழைந்தால் தமிழக எண்ணுடன் ஏராளமான மணல் லாரிகள் வரிசைகட்டி நிற்பதை நாம் காணமுடியும். ஸ்ரீசிட்டி, தடா போன்ற பகுதிகளை கடந்த பிறகு சென்னிகுண்டா, சூலூர் பேட்டை, நாயுடு பேட்டை பகுதிகளுக்கு சென்றால் அதிக அளவு தமிழக மணல் லாரிகளின் நடமாட்டம் உள்ளது.

நாயுடுப்பேட்டை சுவர்ணமுகி ஆற்றுப்படுகையில் தமிழக மணல் லாரிகளின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. இங்கிருந்துதான் அதிகளவில் மணல் கடத்தப்பட்டுகின்றது. இந்த ஆற்றின் நடுவே சாலைகள் அமைத்து பெரிய பெரிய ராட்சச ஜெசிபி இயந்திரங்களை கொண்டு மணல், லாரிகளில் ஏற்றப்படுகின்றன. இதில், சில லாரிகள் ஆந்திர மணல் குவாரிகளுக்கு செல்கின்றன. எனினும், பெரும்பாலான மணல் லாரிகள் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைகின்றன. இவற்றின் மூலமாக மணல் விற்பனை கொடிகட்டி பறக்கின்றனது.

தமிழக-ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை பகுதியிலும் மணல் கடத்தல் அமோகமாக நடைபெறுகிறது. தமிழக எல்லையை கடந்து சில கிலோ மீட்டர் தூரம் சென்ற மலை போல் மணல் குவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த  ஆரணி ஆற்று படுகையில் இருந்து சிறு சிறு டிராக்டர்களில் மணல் ஏற்றப்பட்டு வயல்வெளிகள் வழியாக குவாரிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

' isDesktop="true" id="516483" youtubeid="ZmGgwPevj8Q" category="tamil-nadu">

இது தொடர்பாக டிராக்டர்  ஓட்டுநர்களிடம் விசாரிக்கும்போது மணல் கடத்தல் தொடர்பாக பல்வேறு உண்மைகளை தெரியவந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி வழியாக தமிழக எளவூர் சோதனைச் சாவடி வழியாகவும் , ஊத்துக்கோட்டை சோதனை சாவடி வழியாகவும் லாரிகளில் மணல் தமிழகத்துக்குள் கொண்டு வரப்படுகின்றன.இவை பத்தாயிரம் ரூபாய் முதல் இருபது ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தை சேர்ந்த சிலர் ஆந்திராவில் மணல் குவாரிகளை நடத்தி வருவதால் இந்த மணல் கடத்தல் எவ்வித தங்குதடையுமின்றி நடைபெறுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளை திறக்கலாம் - மருத்துவ வல்லுநர்கள் யோசனை!

ஏற்கனவே தமிழகத்தில் மணல் விற்பனை தடையில் உள்ளதாலும் ,பருவமழை நேரத்தில் தமிழகத்தில் ஏற்படும் மணல் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டும் அதிக லாபம் பார்க்க மணல் கடத்தல் கும்பல் இப்போதே தயாராகிவருவதாக தமிழக மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

மேலும்,  தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட டிஎன் சாண்ட் செயலியில் இன்னும் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களே இடம்பெற்றுள்ளன. செயலி கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: ஐஐடி மெட்ராஸின் பெயர் மாற்றப்படுகிறதா? - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்!

மேலும், கடந்த ஆட்சியில் மணல் விற்பனை முடக்கப்பட்டு எம் சாண்ட் விற்பனை ஊக்குவிக்கப்பட்டதில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எம் சாண்ட் விற்பனைக்கு முன்னாள் அமைச்சர்களின் கல் குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு பல்லாயிரம் கோடி மோசடி நடந்திருப்பதாக லாரி உரிமையாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

மேலும் படிக்க: பழனிசாமி என்னும் சர்வாதிகாரி கையில் அதிமுக - சசிகலாவால் மட்டுமே மீட்க முடியும்: புகழேந்தி!

தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு எம்-சாண்டு ஏற்றுமதி செய்யப்பட்டுவது போன்று ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மணல் இறக்குமதியை அனுமதித்தாலே இது போன்று மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.  ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மணல் கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு என்ற கேள்வி பலரது மனங்களிலும் எழுந்துள்ளது.

Published by:Murugesh M
First published:

Tags: Andhra Pradesh, Sand, Tamilnadu