தாழி, மண் கலயங்கள்... நாகை அருகே குளம் வெட்டும்போது கண்டெடுக்கப்பட்ட முதுமக்களின் பொருட்கள்..

நாகை அருகே குளம் வெட்டும்போது முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தாழி, மண் கலயங்கள்... நாகை அருகே குளம் வெட்டும்போது கண்டெடுக்கப்பட்ட முதுமக்களின் பொருட்கள்..
கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால பொருட்கள்.
  • Share this:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆந்தக்குடி கிராமத்தில் சாமிநாதன் என்பவருக்குச் சொந்தமான புஞ்சை நிலத்தில் உள்ள குளத்தை ஜேசிபி மூலம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, முதுமக்கள் தாழி ஒன்று இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கீழ்வேளூர் வட்டாட்சியர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்குச் சென்று ஊழியர்களைக் கொண்டு புதைப்பொருளைத் தோண்டி எடுத்தார்.

Also see:



தோண்டி எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் நான்கு மண் கலயங்கள், இரண்டு உடைந்த மண் கலயங்கள், சிதைந்த நிலையில் மனித எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. பின்னர், மீட்கப்பட்ட முதுமக்கள் தாழி மற்றும் தொன்மை வாய்ந்த பொருட்கள் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக தனி அறையில் வைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, மீட்கப்பட்ட பொருட்களை தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading