பா.ம.க. தலைவராக வரும் 28-ம் தேதி அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத வாக்குவங்கியை வைத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி, தேர்தல் நேரங்களில் அதிமுக, திமுக என்று மாறி மாறி கூட்டணி வைத்து விமர்சனத்துக்குள்ளானது. இதனையடுத்து 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம்கண்ட பாமகவிற்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை ராமதாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் வகுத்துள்ளனர்.
அதில் முதல்கட்டமாக, உள்ளாட்சிகளில் கட்சியைப் பலப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதிமுக கூட்டணியில் இருந்தாலும், கடந்த ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாமக தனித்துப் போட்டியிட்டது. இந்த சூழ்நிலையில் கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாசை, கட்சித் தலைவராக கொண்டுவர பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28-ம் தேதி சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெறும் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.
Also read... அரசு மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,368 கோடி வீண்? ஆர்டிஐ-யில் அம்பலம்
இதனிடையே கட்சித் தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவருக்கு வரும் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அன்புமணி ராமதாசை தலைவராக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani, Anbumani ramadoss, Dr Ramadoss, PMK, Politics, Tamilnadu