ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இது தான் மாற்றம் முன்னேற்றமா...? செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி

இது தான் மாற்றம் முன்னேற்றமா...? செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

PMK PROTEST | பாமகவினர் ரயிலில் கல்லெறிந்து வன்முறையில் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு யாரோ செய்ததாக தெரிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ரயிலில் கல்லெறிந்த வன்முறை சம்பவம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கோவமடைந்த  அன்புமணி ராமதாஸ் பதில் சொல்லாமல் பாதியிலே செய்தியாளர்கள் சந்திப்பை முடிந்தார்

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று முதலமைச்சரை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம் நல்ல முடிவு எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மேலும், பாமக தொண்டர்கள் அறவழியில் தான்  போராட்டம் நடத்தியதாகவும் அவர் கூறினார்.

Also read... 'கூட்டணி அமைத்து வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது..' - கமல்ஹாசன் பகிரங்க பேட்டி ..

அப்போது பாமகவினர் ரயிலில் கல்லெறிந்து வன்முறையில் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு யாரோ செய்ததாக தெரிவித்தார். ஆனால் புகைப்படம் மற்றும் வீடியோக்களில் பாமகவினரின் கொடி டிசர்ட் அணிந்து இருந்தது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, அன்புமணி ராமதாஸ் பதில் சொல்லாமல் கோவமாக பாதியிலே செய்தியாளர்கள் சந்திப்பை முடித்து கொண்டு புறப்பட்டு சென்றார்.

அப்போது அன்புமணி ராமதாஸ் உடன் வந்த தொண்டர்  ஒருவர் இனிமேல் இப்படி கேள்வி கேட்க கூடாது என்று செய்தியாளர்களை  பகிரங்கமாக மிரட்டினார். மேலும் ஒளிப்பதிவாளர் காட்சி எடுத்துக்கொண்டு இருக்கும் போதே வேகமாக காரை எடுத்து சென்றதால் ஒளிப்பதிவாளர் ஒருவரின் கால் மீது எறிச்சென்றது. இதனால் தலைமைச்செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Anbumani ramadoss, PMK