2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 12,032 பேர் உயிரிழந்துள்ளதாகத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாகக் கோவை மாவட்டத்தில் 1,045 பேர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 929 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 877 பேரும், சேலத்தில் 827 பேரும், மதுரையில் 788 பேரும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வகையில், சராசரியாக நாளொன்றுக்கு 48 பேர் நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளங்கள், சாலையின் மோசமான வடிவமைப்பு, பராமரிப்பின்மை ஆகியவையே விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் அதிவேகமாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்தும், சாலை தடுப்பில் மோதி உயிரிழப்பதும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் இந்த கணக்கு நிலை வெளியிடத்தைத் தொடர்ந்து, இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Also Read : விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கு விவகாரம்: ஒரு வாரம் கெடு விதித்த நீதிமன்றம்!
அவரின் அறிக்கையில் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு மது போதையே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, சாலை விபத்துகளைக் குறைக்க வேண்டும் என நினைத்தால் மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட வேண்டும் என்றும், குறைந்தபட்சம் தேசிய, மாநில மற்றும் மாவட்ட சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மட்டுமாவது மூட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani ramadoss, Road accident, Tasmac