Home /News /tamil-nadu /

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் நடைபயணம்

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் நடைபயணம்

3 நாள் நடைபயணம் அன்புமணி ராமதாஸ்!

3 நாள் நடைபயணம் அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss | தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் தொடங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dharmapuri, India
    தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி பாமக தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தமது 3 நாட்கள் நடைபயணத்தை இன்று தொடங்கி உள்ளார்.

    ஒகேனக்கல் தொடங்கி பொம்மிடி வரை பென்னாகரம், அரூர் உள்ளிட்ட 30 ஊர்கள் வழியாக காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரி அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான இந்த திட்டத்தை செயல்படுத்தவும், மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நடைபயணத்தை ஒகேனக்கலில் தொடங்கினார்.

    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ”தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3 நாள் நடைபயணத்தை தொடங்கினேன்”என ட்வீட் செய்து நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்..மேலும் காவிரியின் உபரிநீர்!! தருமபுரியின் உயிர்நீர்! என்ற எழுச்சி வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்..

     



    இன்று காலையில் தொடங்கிய இந்த பயணத்தை பென்னாகரம், இண்டூர், தருமபுரி, கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சென்று, வரும் ஞாயிற்றுகிழமை பொம்மிடியில்  நிறைவு செய்யவுள்ளார்.

    Read More : நிலுவை தொகையை செலுத்தி தமிழகத்தில் மின்தடை ஏற்படாமல் தடுங்கள் - ராமதாஸ் வேண்டுகோள்


    அவரது நடைபயணத்தில் பாமக தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதில் அரசியல் செய்யவில்லை என்றும், திட்டம் நிறைவேறும் வரை ஓயமாட்டேன் என்றும் தெரிவித்தார். மேலும் நடைப்பயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Anbumani ramadoss, Dharmapuri, PMK

    அடுத்த செய்தி