பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் போட்டியிடுகிறார் அவரை ஆதரித்து பாமக அன்புமணி ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “பண்ருட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ராஜேந்திரன் விவசாயி விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். எனவே அவருக்கு கட்டப்பஞ்சாயத்து ரவுடிசம் செய்யத் தெரியாது. மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே தெரியும். எனவே அவருக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
பண்ருட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு ரவுடி. கட்டப்பஞ்சாயத்து,வழிப்பறி, கொலை கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் செய்பவர். ஆனால் அவர் பெயரை நான் சொல்ல மாட்டேன். வேல்முருகனை பாமக கட்சிக்கு கொண்டு வந்தவன் நான். கட்சியில் பல பொறுப்புகளை கொடுத்தவன் நான். அதற்காக மக்களாகிய உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
எதிர் வேட்பாளராக களம் காணும் திமுக வேட்பாளரை தயவுசெய்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யவேண்டாம் என இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். பண்ருட்டியில் வணிகர்கள் அதிகமுள்ள பகுதி. எனவே அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் அமைதியாக வணிகம் செய்ய வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளித்தால் உங்கள் அமைதி முற்றிலும் அழிந்துவிடும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. பண்ருட்டி தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் மாவட்டமே முற்றிலுமாக அழிந்துவிடும். வேல்முருகன் மீது பல வழக்குகள் உள்ளன”. எனக் கூறி பட்டியலை காட்டிக் கொண்டு பேசினார் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ்.
இதே போல் 25 நிமிடம் பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகனை வேல்முருகன் என்ற பெயரை பண்படுத்தாமல் (டகில்) என குறிப்பிட்டு கடுமையாக தாக்கி பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani ramadoss, PMK, TN Assembly Election 2021, Velmurugan