ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏலப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏலப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பேசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏலப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாட்டிற்கு ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தேவையில்லை என்றும், இந்த திட்டத்தை ஏலப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தல் வெயியிட்டுள்ள பாதிவில், “தமிழ்நாட்டில் காவிரி பாசன பகுதியில் விழுப்புரம்கடலூர் மாவட்டத்தையொட்டிய ஆழ்கடல் பகுதியில் 8,108 சதுர கி.மீ பரப்பளவிலான ஹைட்ரோகார்பன் திட்டம் உட்பட மொத்தம் 8 திட்டங்களுக்கு மத்திய அரசு ஏலப்புள்ளிகளை கோரியுள்ளது. இவற்றில் தமிழகத்திற்கான திட்டம் தேவையற்றது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 7, 264 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த 5 உரிமங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை காவிரி பாசன மாவட்டங்களில் உள்ளன. அவற்றை செயல்படுத்த மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.

புதிதாக மேலும் திட்டம் தேவையில்லை. அத்திட்டம் ஆழ்கடலில் செயல்படுத்தப்பட்டாலும் அதன் தாக்கம் நிலப்பரப்பிலும் இருக்கும். அது காவிரி படுகையில் விவசாயத்தை பாதிக்கும்.

Must Read : அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி எஸ்.ராமலிங்கம் வழக்கு

அதனால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பேசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏலப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Anbumani ramadoss, Hydrocarbon Project, PMK