அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிமுக வெற்றி பெற்றவுடன் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குமாரபாளையம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக தலைமையிலான கூட்டணி சமூகநீதி கொண்ட கூட்டணி என்றார். எனவே, அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிமுக வெற்றி பெற்றவுடன்
இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என்றார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள இலவச வாஷிங் மெஷின் திட்டத்தை பெண்களின் விடுதலைக்கான கருவியாக பார்க்கிறேன் என அன்புமணி ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்ப்படும், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படுவது குறித்த வாக்குறுதிகள் மக்களின் வாழ்க்கை மேன்மை அடைய வேண்டும் என்பதை அடிப்படியாகக் கொண்டது என்றும் கூறினார்.
அத்துடன்,
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டஅணி தேர்தலில் வெற்றி பெற்றால், 70 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயி ஒருவர் மீண்டும் முதலமைச்சராகும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறினார்.