முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதலமைச்சர் ஆசை இல்லை... பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம்

முதலமைச்சர் ஆசை இல்லை... பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம்

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்

முதலமைச்சராகும் ஆசை தனக்கு இல்லையென்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி சேர்த்து 39 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. தருமபுரி தொகுதியில் தோல்வியடைந்த அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலும் அ.தி.மு.க, பா.ம.க கூட்டணி பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்யவில்லை. அதனைத்தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க ஈடுபாடு காட்டவில்லை. தற்போது நடைபெற்ற முடிந்த ஈரோடு இடைத்தேர்தலும் அ.தி.மு.கவுக்கு பா.ம.க ஆதரவு அளிக்கவில்லை. இந்தநிலையில், பாமக மாநில மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னை அடையாறில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘தமிழ்நாட்டில் பாமகவின் ஆட்சி, அதிகாரம் விரைவில் வரும் என்றும், தனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை என்றும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘என்.எல்.சி தரகர் போல வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்று காட்டமாக விமர்சித்தார்.

"இந்த நடவடிக்கை நெருக்கடி நிலை காலத்தை நினைவூட்டுகிறது" - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

காவல்துறையை வைத்து அச்சுறுத்தி நிலங்களை கையகப்படுத்தி வருவதை தடுத்து நிறுத்தி 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Anbumani ramadoss, PMK