ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“எங்களால்தான் அன்புமணி இப்போ எம்.பி... மனசுல வச்சு பேசனும்..” அதிமுக பற்றி விமர்சனத்திற்கு ஜெயக்குமார் பதிலடி

“எங்களால்தான் அன்புமணி இப்போ எம்.பி... மனசுல வச்சு பேசனும்..” அதிமுக பற்றி விமர்சனத்திற்கு ஜெயக்குமார் பதிலடி

அன்புமணி, ஜெயக்குமார்

அன்புமணி, ஜெயக்குமார்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, அதிமுக நான்காக உடைந்துள்ளது. அடுத்தது நாம் தான் என கூறியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அதிமுகவால் தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி பதவி கிடைத்துள்ளது என்பதை அவர் மனதில் வைத்து பேச வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, அதிமுக நான்காக உடைந்துள்ளது. அடுத்தது நாம்தான் என கூறியிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு பக்கம் வருத்தமும் வேதனையும் உள்ளது. மறுபக்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாமகவை ஏற்றிவைத்த ஏணியே அதிமுகதான். அதிமுக ஏற்றி விடவில்லை என்றால் பாமக என்ற கட்சியே கிடையாது.

அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும் ஜெயலலிதா ஆட்சியில் 5 சீட்டு கொடுத்ததால்தான், 4 இடத்தில் வெற்றி பெற்றனர். அந்த 4 இடத்தில் வெற்றி பெற்றதால் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது. அன்புமணி ராமதாஸ் அப்படி பேசினால் உங்கள் பக்கம் உள்ளவர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.

அதிமுகவால் மட்டுமே சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ளே சென்றீர்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்து பேசினால் அதிமுக சிறுமை வாய்ந்ததாக மாறி விடுமா?

அதிமுகதான் அன்புமணி ராமதாஸுக்கு எம்பி என்ற பதவியை அடையாளம் காட்டியது. அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறுமைப்படுத்துகின்ற வேலையை அன்புமணி ராமதாஸ் செய்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, Anbumani ramadoss, Jayakumar, PMK