பெண்களை இழிவுபடுத்திய திண்டுக்கல் லியோனிக்கு பாடநூல் நிறுவனத் தலைவர் பதவியா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

அன்புமணி ராமதாஸ்

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

 • Share this:
  தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக, திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்ய உருவாக்கபட்ட அமைப்பாகும். 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல், சிறுபான்மை மொழி பாடநூல், தொழிற்கல்வி பாடப்புத்தகம், ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான பாட புத்தகம், பல்நுட்ப கல்லூரிக்கான பாட புத்தகம் ஆகியவற்றை தயாரிக்கும் பணியை இக்கழகம் மேற்கொள்கிறது.

  மேலும், மறுபதிப்பு, மொழிபெயர்ப்பு பணிகளையும் செய்கிறது. இந்நிறுவனத்தின் தலைவராக, திண்டுக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த ஐ லியோனி நியமிக்கபட்டிருக்கிறார். ஆசிரியரான இவர், மேடைப் பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவராக மக்களால் அறியப்பட்டவர்.

  Also Read : டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது தவணை தடுப்பூசி

  இந்நிலையில் பெண்களை இழிவாக பேசிய திண்டுக்கல் ஐ.லியோனிக்கு  பாடநூல் நிறுவனத் தலைவர் பதவியா? என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில்,

  தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது!  பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

  Also Read : கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட பின் கண் பார்வையை திரும்ப பெற்ற 70 வயது மூதாட்டி!

  திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும் என்றுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: