முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பு முடக்கம்? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பு முடக்கம்? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : ஒரு மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம் போதுமானது என்று பிரசார்பாரதி தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் உள்ள 5 வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் முடக்கி, அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையிலிருந்து, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க முடிவு செய்திருப்பதாக டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அவை இப்போதுள்ளவாறே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுவை வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் முடக்கி, அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையிலிருந்து, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க

@prasarbharati (பிரசார்பாரதி) தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டு வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி நான் கோரியிருந்த போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று பிரசார்பாரதி (@shashidigital) விளக்கமளித்திருந்தது. ஆனால், முடக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

ஒரு மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம் போதுமானது என்று பிரசார்பாரதி தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளூர் பண்பாட்டு பரவலையும், பகிர்தலையும் தடுக்கும். அப்படி செய்யக் கூடாது.

Must Read : வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 4 சுங்கச்சாவடிகளில் டோல் கட்டணம் எவ்வளவு?

5 வானொலி நிலையங்கள் முடக்கப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள். நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள். எனவே இந்த முடிவை கைவிட்டு, 5 வானொலி நிலையங்களும் இப்போதுள்ளவாறே தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்க வேண்டும்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Anbumani ramadoss, PMK