திமுக... அராஜகக் கூட்டணி, அதிமுக... அமைதிக் கூட்டணி - அன்புமணி

அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி அவர்களாலேயே அதிமுக உடனான இந்த கூட்டணி அமைந்தது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

திமுக... அராஜகக் கூட்டணி, அதிமுக... அமைதிக் கூட்டணி - அன்புமணி
அன்புமணி ராமதாஸ்
  • News18
  • Last Updated: April 15, 2019, 1:37 PM IST
  • Share this:
திமுக கூட்டணி அராஜகக் கூட்டணி,  அதிமுக கூட்டணி தான் அமைதிக் கூட்டணி என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே நாமக்கல் நாடாளுமன்ற அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் *TLS ( எ) காளியப்பன் அவர்களை ஆதரித்து பொதுக்கூட்ட மேடையில் பிராசாரம் செய்து வருகிறார்.

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், கல்விக் கடன் மற்றும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடிய தகுதி உள்ள கூட்டணி அதிமுக கூட்டணி மட்டுமே,  திமுக கூறுவது வெற்று வாக்குறுதியே என்று கூறினார்.


தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் தவிர வேறு யாரும் கட்சியினர் இல்லையா என கேட்ட உதயநிதி ஸ்டாலினே, உன் கட்சியில் உன் குடும்பம் தவிர யாருமே இல்லையா என ஒருமையில் பேசினார் அன்புமணி ராமதாஸ். மேடை நாகரீகத்தோடு பேசிய என்னை இப்படிப் பேச வைத்தது திமுக தான் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி அவர்களாலேயே அதிமுக உடனான இந்தக் கூட்டணி அமைந்தது என்று தெரிவித்த அன்புமணி, காவிரி, கோதாவரி இணைப்பு நீர்மேலாண்மை போன்ற திட்டங்கள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அதற்கு இந்த இடத்தில் நான் உறுதி அளிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading