பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்து அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக மாநில சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸில் இன்று தொடங்கியது. இதில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில், பாமகவின் தற்போதைய இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸை பாமகவின் தலைவராக தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை வாசித்த பாமகவின் தற்போதைய தலைவர் ஜி.கே.மணி, சோம்நாத் சாட்டர்ஜி, ஐ.நா. தலைவராக இருந்த பான் கி மூன் போன்றோர்களால் பாராட்டப்பெற்றவர் அன்புமணி ராமதாஸ்.
இதையும் படிக்க: அக்னி நட்சத்திரம் இன்று விடைபெறுகிறது.. வரும் நாட்களில் வெயில் எப்படி இருக்கும்?
மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய தொகுப்புகளில் பட்டியலின மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதியை காத்தவர் அன்புமணி ராமதாஸ், பாமகவின் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றுகொண்டால் கட்சியை புதிய உயரத்துக்கு அவர் எடுத்து செல்வார் என்பதை இந்த பொதுக்குழு நம்புகிறது. எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படுகிறார் என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.