சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சட்டப்பேரவை தீர்மானம் - முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அன்புமணிக்காக பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

 • Share this:
  சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் சந்தித்தனர்.

  அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கும் சட்டம் இயற்றியதற்கும் நேரில் நன்றி தெரிவித்ததாகக் கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியதாக கூறிய அன்புமணி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குடியுரிமை பறிப்பதற்கான சட்டமல்ல என தெரிவித்தார்.

  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஒரு நபர்கூட பாதிக்கமாட்டார் எனக் கூறிய அவர், அதே நேரத்தில் என்.பி.ஆர் தங்களுடைய கொள்கைக்கு எதிரானது எனவும் , தமிழக சட்டமன்றத்தில் என்பிஆர்-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

  Also see:
  Published by:Rizwan
  First published: