பள்ளிகல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் பதிலுரை அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவையிலே
திமுக ஆட்சியில்தான் பள்ளிக்கல்வி துறைக்கு 36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மீனை பிடித்துக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது தான் திராவிட மாடல் என்று முதலமைச்சர் செயல்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும், ஆசிரியர்கள் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும், ‘குட் டச் பேட் டச்’ என்றால் என்ன என்று பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவீன முறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கும் பயற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்றும், 47 லட்சத்தில் இருந்து 53 லட்சமாக உயர்ந்துள்ளதாக கூறினார். இதனால் 6 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை தேடி வந்த சூழல் உருவாகியுள்ளதாக பெருமிதத்துடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். இதோடு, 15-18 வயதுள்ள 33 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ், சமமான அளவு தேநீர் கொடுங்கள் என்றார் பெரியார், ஒரே வகையான குவளையில் தேநீர் கொடுங்கள் என்றார் அம்பேத்கர்.
Must Read : அந்தமானில் ஆளுநர் பொறுப்பு வாங்க அண்ணாமலை துடிக்கிறார் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்
பசியுடன் இருப்பவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்றார் கலைஞர், தேநீரையும் குவளையும் இலவசமாக கொடுங்கள் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.