• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல... - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல... - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் கல்வியில் சீர் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

  • Share this:
அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளமாக மாற்றுவோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் தனி வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான 3ஆவது நாள் விவாதத்தில் பாமக சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

அப்போது பேசிய அவர், “ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்திருக்கிறீர்கள். அதில் ஒவ்வொரு நதியிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். நீர் மேலாண்மைக்கு நீரியல் வல்லுநர்களை கொண்ட குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் கல்வியில் சீர் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். கூடுதல் கல்வி நிலையங்கள் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இந்த நிதிநிலை அறிக்கையானது 6 மாதத்திற்கானதுதான். அடுத்த நிதிநிலை அறிக்கைகளில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Must Read : நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதா பெயரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சூட்ட வேண்டும் - உதயநிதி கோரிக்கை

அரசு ஊழியர்களின்  அகவிலைப் படியை நாம் அடுத்த ஆண்டுக்கு  ஒத்தி வைத்துள்ளோம். இதனால் ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் கோடி என வருடத்திற்கு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இனி வரும் காலங்களில் பள்ளிக் கல்வித்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவோம். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்” என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: