• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Anbil Mahesh Poyyamozhi : பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஷ் ‘துடிப்பான இளைஞர்’ என பெயரெடுத்தவர்...

Anbil Mahesh Poyyamozhi : பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஷ் ‘துடிப்பான இளைஞர்’ என பெயரெடுத்தவர்...

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 43 வயதாகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் இளம் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார்.

  • Share this:
    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மகனாவார். அத்துடன், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் பி. தர்மலிங்கத்தின் பேரனும் ஆவார்.

    அன்பில் மகேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களுள் ஒருவராக இருந்துவருபவர் என்றும் சொல்லப்படுகின்றது. எம்.சி.ஏ. பட்டதாரியான அன்பில் மகேஷ் மிகவும் துடிப்பான இளைஞர் என்ற நற்பெயரைப் பெற்றவர்.

    இவர் திருவெறும்பூர் தொகுதியில் 2016ஆம் ஆண்டு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வான அன்பில் மகேஷ், அதன்பின்னர் தற்போது மீண்டும் எம்.எல்.ஏ.வாகியுள்ளார். அவருக்கு தமிழக அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை வழங்கப்பட்டள்ளது.

    உதயநிதி ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ்


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறியிருந்தார். அத்துடன், பள்ளிக் கல்வித் துறையில் உள்ள சவால்களை எதிர்கொண்டு வெற்றிகாண்பார் என்றே சொல்லப்படுகின்றது.

    பாரம்பரியமிக்க திமுக குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலைன் படி துடிப்பாகவும், சிறப்பாகவும் செயல்படுவார் என அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி - மு.க.ஸ்டாலின்


    இந்நிலையில், “லாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்சிக்கு போகும் அருமை மாப்பிள்ளை அன்பில் மகேஷ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

    Must Read : மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்

     

    லாஸ்ட் பென்ச்சில் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவருடையது” என திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: