12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி - அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் வகுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 • Share this:
  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வி.பி.நாகைமாலி கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் வகுத்து, உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, 2017-18ஆம் ஆண்டு பயின்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வி.பி.நாகைமாலி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து இனி வரும் காலங்களில் கல்வி ஆண்டு தொடங்கும் போதே மடிக்கணினி வழங்கினால் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.‘

  இதற்கு பதிலளித்துப் பேசிய, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2011ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட வருவதாகவும், 2011-12ஆம் ஆண்டு முதல் 2019-20 ஆம் ஆண்டு முடிய இத்திட்டத்தின் கீழ் 45,71,675 மாணவர்கல் பயன் பெற்றுள்ளனர் என்றும் இதற்காக 6349.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

  மேலும், 2017 -18ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு,காஞ்சிபுரம்,மதுரை, பெரம்பலூர்,சேலம், தேனி ஆகிய எட்டு மாவட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்ல மடிக்கணினிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் பயின்ற மாணவர்களில் தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிலும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் அத்தாட்சி அடிப்படையில் மடிக்கணிகள் வழங்குவதற்கு அரசாணை பிறபிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  2020-21ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு பயின்ற 4,97,028 மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய மடிக்கணினிகள் இன்னும்கொடுக்கப்படவில்லை எனவும், தற்போது 2021-22ஆம் கல்வியாண்டியில் 11ஆம் வகுப்பு தோராயமாக பயின்று வரும் 5,00,000 மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்படவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

  2017-18ஆம் ஆண்டில் வழங்கப்படவேண்டிய நிலுவை 1,75,789 என மொத்தம் 11,72,817 மடிக்கணிகள் வழங்கப்படவேண்டியுள்ளதாகவும், தற்போது அனைத்து பணிகளும் முடிப்பதற்கு நிர்வாக அனுதி வழங்குவதற்கு பூர்வாங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும், படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி மடிக்கணிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும் கூறினார்.

  Must Read : தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின்

  மேலும், கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் வகுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: