திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு, சோழமாதேவி ஆகிய ஊராட்சிகளில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார். அப்போது பேசியவர், ”திருவெறும்பூர் தொகுதியில் நீங்கள் தேர்வு செய்த எம்.எல்.ஏ ஒருவராகவும் தமிழகத்தின் முதல்வர் வேறு கட்சியை சேர்ந்தவராகவும் இருப்பார். அதனால் கடந்த 5 ஆண்டுகளாக போராடி போராடி உங்களுடைய கோரிக்கைகளில் 10ல் 4, 5 கோரிக்கைகள் தான் செய்து முடிக்கப்படுகின்றன. இன்றைக்கு இது ஒரு ஆளுங்கட்சி தொகுதியாக மாறுவதற்கான நல்ல சந்தர்ப்பம். ஒட்டுமொத்த தமிழ்நாடே அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று முடிவு செய்துவிட்டார்கள். திமுக வெற்றி பெறும்போது தான் அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை உடனடியாக கொண்டுவர முடியும்” என்றார்.
மேலும் படிக்க... தமிழக சட்டப்பேரவைக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது..
அதனைத் தொடர்ந்து பேசியவர், “ தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும். மாநகர பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம். கொரோனா காலத்தில் நமக்கு ஏற்பட்ட இழப்பை முன்னிட்டு கருணாநிதி பிறந்த நாளன்று ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் ரூ.4,000 வழங்கப்படும். நல்ல திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை வந்து சேர வேண்டும் என்றால் நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து திமுகவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, திருவெறும்பூரை திமுக-வின் கோட்டையாக மாற்றுங்கள்” என்று பேசினார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thiruverumbur Constituency, TN Assembly Election 2021, Trichy