திருச்சியில் தமிழ்நாடு ஜிஎஸ்டி அசோசியேசன் சார்பில் மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்து இதில் ஆயிரக்கணக்கான பட்டயக் கணக்காளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் ஜிஎஸ்டி குறித்த விளக்கங்களையும் மூத்த பட்டயக்கணக்காளர்கள் தெளிவுபடுத்தியதுடன், புதிய ஜிஎஸ்டி நடைமுறைகள் குறித்து விளக்கி பேசினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஜிஎஸ்டி பட்டயக் கணக்காளர்களுக்கு என நலவாரியம் அமைக்கவேண்டும், வரி சீர்திருத்தம் மேற்கொள்ளும் மத்திய அரசு ஜிஎஸ்டி ஆலோசகர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும் மற்றும் ஜிஎஸ்டி வரியினை செலுத்தும் இணையதளம் அடிக்கடி இறுதி கட்டத்தில் முடங்கிப்போவது, பிரச்சனைகள் ஏற்படுவது வாடிக்கையாகிறது இதுபோன்ற நிகழ்வுகள் வரும்காலங்களில் நிகழாதவாறு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கம்பெனிகளில் நிகழும் ஆடிட் குளறுபடிகளுக்காக சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்களை கைது செய்து, துன்புறுத்துவதை கண்டிப்பதாகவும் தெரிவித்துக் கொண்டார். ஜிஎஸ்டி நாளுக்கு நாள் கடினமாகியே வருகிறது, 2017-18க்கும் 2022க்கும் ஜிஎஸ்டியில் பலமாற்றங்களை கவுன்சில் செய்துள்ளது.
ஜிஎஸ்டி தாக்கல் மற்றும் பணம் பெறுதல் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் வரிவருவாய் உயர்ந்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது 1 லட்சத்து 68ஆயிரம்கோடி வசூல் செய்துள்ளதாக கூறும் அரசு, அதேவேளை 15.08சதவீதம் விலையேற்றமும் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களால் வருவாய் அதிகரித்துள்ளது என்றும், பொருளாதார நடவடிக்கையினால் வருவாய் உயரவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இழப்பீட்டுத் தொகையினை மாநில அரசுகள் கேட்கும் பட்சத்தில் அதனை மத்திய அரசு வழங்கவேண்டும். பெட்ரோல், டீசல் வரியினைக் குறைப்பதாக கூறிவிட்டு அடுத்து வரும் 9 மாத்திற்கான தொகையினை நேற்று ஆயில்பாண்ட் போட்டுள்ளதாகவும், வரப்போகும் நஷ்டத்திற்காக மத்திய அரசு முன்கூட்டியே கடன் வாங்குவதுடன், மாநில அரசின் கடன்தொகையையும் நிர்ணயம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
Must Read : ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் ரெய்டு... 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் - சீல் வைத்து நடவடிக்கை
2026ல் தான் நீங்க மன்மோகன் சிங் வாங்கிய கடனையே அடைக்கப் போகிறீர்கள். 2 லட்சத்து 60ஆயிரம்கோடி கடனை அடைப்பதற்காக 25 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். மேலும், இதற்காக ஏன் ஆயில் பாண்ட் போடப்பட்டார்கள் என்பதற்கான பதிலை அண்ணாமலையோ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ பதில் சொன்னால் நல்லது என்று கூறினார்.
செய்தியாளர் - இ.கதிரவன், திருச்சி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.