• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கணவன், மனைவி வெட்டிக்கொலை... சொத்து தகராறு காரணமா? போலீஸ் விசாரனை!

கணவன், மனைவி வெட்டிக்கொலை... சொத்து தகராறு காரணமா? போலீஸ் விசாரனை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    கன்னியாகுமரியில் பூ வியாபாரியின் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், அவரையும், அவரது மனைவியையும் வெட்டிக் கொன்றனர். சொத்து சண்டையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    தோவாளையைச் சேர்ந்த முத்து என்ற மணிகண்டன் மலர்சந்தையில் மொத்த வியாபாரம் செய்து வந்தார். நேற்று நள்ளிரவு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் மணிகண்டன் வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல், மணிகண்டன், அவரது மனைவி கல்யாணி, மகள் ராமலட்சுமியை கண்மூடித்தனமாக வெட்டினர்.

    இதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 10-ம் வகுப்பு மாணவியான ராமலட்சுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இக்கொலை சம்பவம் பற்றி ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்யாணிக்கும் அவரது அண்ணனுக்கும் இடையே சொத்து சண்டை இருந்ததாகவும், இது தொடர்பாக கல்யாணி அளித்த புகாரின்பேரில் நேற்று எஸ்பி அலுவலகத்தில் சமாதான பேச்சு நடந்ததாகவும் தெரிகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு வீட்டிற்குள் நுழைந்த கும்பல் கல்யாணியை குறிவைத்து வெட்டியதாகவும், அதனை தடுக்க முயன்றபோதுதான், மணிகண்டனுக்கும், ராமலட்சுமிக்கும் வெட்டு விழுந்ததாகவும் தெரிகிறது. எனவே சொத்து பிரச்னைக்காக, கல்யாணியை அவரது அண்ணனே ஆள் வைத்து கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: