தமிழக போலீசிடம் சிக்கிய சர்வதேச போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி!

குற்றவாளி சவுத்தை கைது செய்த போலீசார் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட 77 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தமிழக போலீசிடம் சிக்கிய சர்வதேச போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி!
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்
  • News18
  • Last Updated: September 26, 2019, 6:00 PM IST
  • Share this:
தமிழக - கேரள பகுதிகளில் கள்ளநோட்டு, போதை பொருளைப் புழக்கத்தில் விட்ட வழக்கில் சர்வதேச குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வினு என்பவரின் கடைக்கு ஆட்டோவில் வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த சவுத் என்பவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

அந்த நோட்டை பார்த்து சந்தேகமடைந்த வினு, மார்த்தாண்டம் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.


இதை தொடர்ந்து சவுத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பிரபல கள்ளநோட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் என்பதும், கேரளா, மும்பை விமான நிலையத்தில் இருந்து பெண்கள் மூலம் போதை மருந்துகளை பல நாடுகளுக்கு கடத்தியதும் தெரியவந்தது.

அவரைக் கைது செய்த போலீசார் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட 77 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காட்டாக்கடையில் உள்ள சவுத்தின் வீட்டில் சோதனை செய்து கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தைக் கைப்பற்றினர்.

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிபிசாமி, மணியன், ஜேக்கப், ஜஸ்டின் ஜேக்கப், சேகர் உள்ளிட்டோரையும் கைது செய்தனர்.

Loading...

Also see...

First published: September 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...