பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பொது நல வழக்கு...!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பொது நல வழக்கு...!

சென்னை உயர்நீதிமன்றம்.

ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி மீதான புகாரை மாநில காவல்துறையான சிபிசிஐடி விசாரித்தால், அவர் மீது மென்மையான அணுகுமுறையையே கையாள்வார்கள் என்றும், வழக்கை வாபஸ் பெறும்படி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து, அவரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குவார்கள் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காவல்துறை முன்னாள் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.-யான கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கூடுதல் டிஜிபி, ஏற்கனவே இதேபோல வேறொரு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்றும், தொடர்ந்து இதேபோன்ற குற்றச்சாட்டில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் குற்றம்சாட்டப்பட்டவரை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Also read... வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து பசும்பொன் மக்கள் கழகம் நீதிமன்றத்தில் வழக்கு...!

ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி மீதான புகாரை மாநில காவல்துறையான சிபிசிஐடி விசாரித்தால், அவர் மீது மென்மையான அணுகுமுறையையே கையாள்வார்கள் என்றும், வழக்கை வாபஸ் பெறும்படி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து, அவரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குவார்கள் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிபிசிஐடி விசாரணை தொடங்கிய நிலையிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தொடர்ந்து சிபிசிஐடி விசாரித்தால் முறையாக இருக்காது எனக் கூறியுள்ள மனுதாரர், பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: