தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (பாகம்-1) புத்தக வெளியிட்டு விழா
சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில்,
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.
மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை அனுபவங்கள் அடங்கிய ‘உங்களில் ஒருவன்’ (பாகம் -1) என்ற சுயசரிதை நூலில், அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார். பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளியிடுகிறது.
சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு உங்களில் ஒருவன் புத்தக வெளியிட்டு விழா நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குகிறார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசுகிறார்.
இந்நிலையில், ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அகில இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமான மூலம் சற்று முன் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, ஈவி.கேஸ் இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர்கள் சென்னை வந்தடைந்த ராகுல் காந்தி அவர்களுக்கு பூங்கெத்து குடுத்து வரவேற்றனர்.
Must Read : நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்.. மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் பரபரக்கும் போஸ்டர்
காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பழைய விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர் வரை சாலையோரம் கைகளில் ‘பி லவ்டு லீடர்’ என்கிற வாசங்கள் அடங்கிய பதாகை ஏந்தியவாறு மேள தாளம் முழங்க மயிலாட்டதுடன், கரக்காட்டம், ஆகிய கலை நிகழ்ச்சிகளுடன் ராகுல் காந்தியை வரவேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.