தண்ணீர் பிடிப்பதில் தகராறு... திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை - இருவர் கைது!

கைது செய்யப்பட்ட பிரபுதாஸ் மற்றும் பாமா

பாமா,பிரபுதாஸ் இருவரும் திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி விடுவோம் என மிரட்டியதாகவும் அதனால் மனமுடைந்த தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீபா (26). இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபா தண்ணீர் பிடிப்பதற்கு வீட்டின் அருகே செல்லும்பொழுது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் பாமா,பிரபுதாஸ் ஆகிய இருவரும் உன்னைப்பற்றி திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி விடுவோம் என மிரட்டியதாகவும் அதனால் மனமுடைந்த தீபா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Also read... Kishore K Swamy: திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி கைது

இது தொடர்பாக பெண்ணின் தாய் கலாவதி புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றியதுடன் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து பாமா மற்றும் பிரபுதாஸ் உள்ளிட்ட இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: