2 நாட்களுக்கு முன்பே குழி தோண்டி வைத்து கூலிப்படையை ஏவி அண்ணனைக் கொன்ற தம்பி!

அரிவாள், கத்தி, கடப்பாறை போன்ற ஆயுதங்களால் வரதராஜை சரமாரியாகத் தாக்கி வெட்டி கொலை செய்துள்ளனர். பின் அங்கேயே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

news18
Updated: February 19, 2019, 11:07 AM IST
2 நாட்களுக்கு முன்பே குழி தோண்டி வைத்து கூலிப்படையை ஏவி அண்ணனைக் கொன்ற தம்பி!
மூட்டையில் கட்டியபடி உள்ள வாதராஜனின் சடலம்
news18
Updated: February 19, 2019, 11:07 AM IST
ரட்சகன் திரைப்பட பாணியில், புதைக்க குழிதோண்டி வைத்துவிட்டு, சொத்து சண்டையில், கூலிப்படையை ஏவி, அண்ணனை தம்பியே கொலை செய்த சம்பவம் நாமக்கல் ராசிபுரத்தில் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் வரதராஜ் மற்றும் விஜயகுமார். திங்கட்கிழமை காலை இவர்களின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்த பணியாட்கள், வரதராஜின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டு வாசலில் திட்டு திட்டாக ரத்தத் துளிகள் கிடந்துள்ளன. கதவும் திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கட்டில், சுவர் என அனைத்திலும் ரத்தக் கறைகள் இருந்துள்ளன.

மேலும் கட்டிக்கு கீழே ரத்தம் உறைந்து போயிருந்தது. அவரைக் காணவில்லை. பதறிப்போன பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

போலீசார் விரைந்து வந்து, வரதராஜின் வீட்டை ஆய்வு செய்தனர். மோப்பநாய் அந்தப் பகுதியைச் சுற்றி சுற்றி வந்துள்ளது. பின் வீட்டில் இருந்து வெளியே ஓடிய மோப்பநாய், வரதராஜின் சகோதரர் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் அவர் தனது சகோதரரைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

அவர் தனது வாக்குமூலத்தில் அரியாகவுண்டம்பட்டியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்களபுரம் அருகே உள்ள ஓடையில் வரதராஜின் சடலத்தைப் புதைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
Loading...
அவரை அங்கு அழைத்துச் சென்ற போலீசார் ஓடையில் அவர் காட்டிய இடத்தைத் தோண்டி அங்கு மூட்டையில் கட்டி புதைக்கப்பட்ட வரதராஜின் சடலத்தை மீட்டனர்.

51 வயதான வரதராஜ் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது சகோதரர் விஜயகுமாருக்கு 40 வயதில் திருமணமானது. ஆனால் அவரது மனைவி இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாததால் வரதராஜ் வீட்டினை அடுத்த வீட்டில் விஜயகுமாரும் தனியாக வசித்து வந்துள்ளார்.

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த விஜயகுமார் சொத்தினைப் பிரித்து தரும்படி அடிக்கடி அண்ணன் வரதராஜுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சொத்தினைப் பிரிக்க வரதராஜ் உடன்படவில்லை. சில காலம் கழியட்டும் என்று கூறி வந்துள்ளார்

ஆத்திரமடைந்த விஜயகுமார், வரதராஜைக் கொலை செய்ய கூலிப்படையினருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பே, 30 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள மங்களபுரம் ஓடையில் இதற்காக பொக்லைன் மூலம் ரெடியாக குழியும் தோண்டி வைத்துள்ளனர்.

திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை இரவு வரதராஜ் வீட்டிற்கு சென்ற விஜயகுமார் மீண்டும் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, மறைந்திருந்த கூலிப்படையினர் 7 பேர் அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.

அரிவாள், கத்தி, கடப்பாறை போன்ற ஆயுதங்களால் வரதராஜை சரமாரியாகத் தாக்கி வெட்டி கொலை செய்துள்ளனர். பின் அங்கேயே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

வரதராஜின் சடலத்தை மூட்டையில் கட்டி, இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு சென்றுள்ளனர். ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் மூட்டையைப் போட்டு அரைகுறையாக மண்ணைத் தள்ளி மூடிவிட்டு வந்துள்ளனர்.

யாராவது பார்த்தால், மணல் அள்ளுவதற்காக குழி தோண்டி இருக்கலாம் என்று நினைப்பதற்காக அரைகுறையாக மூடி விட்டு வந்ததாக விஜயகுமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மறுநாள் காலையில் பணியாளர்கள் மூலம் நடந்த சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் விஜயகுமார் உள்ளிட்ட 3 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் அண்ணனை கூலிப்படை ஏவி தம்பி கொலை செய்த சம்பவம் அரியாகவுண்டம்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also see...

First published: February 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...