ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தம்பி கொலைக்கு பழிக்குப் பழி தீர்த்து ரத்தத்தை சமாதியில் தெளித்த அண்ணன்!

தம்பி கொலைக்கு பழிக்குப் பழி தீர்த்து ரத்தத்தை சமாதியில் தெளித்த அண்ணன்!

கொலை செய்யப்பட்ட சிவன் மூர்த்தி

கொலை செய்யப்பட்ட சிவன் மூர்த்தி

பிரசாந்த் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் கொலை நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்துள்ள வாட்ஸ்ஆப் குரூப்பில், கொலையான பிரசாந்தின் அண்ணன் ஊர்காவலன் என்ற பெயரில் ஆடியோ ஒன்றை அனுப்பினார்.

மேலும் படிக்கவும் ...
 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மதுரையில் தன் தம்பியை கொலை செய்தவரை தீர்த்துக்கட்டி அவரது ரத்தத்தை தம்பி சமாதியில் தெளித்தேதாடு, அதை வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிட்டு அண்ணன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாத்தூரைச் சேர்ந்தவர் பிரசாந்த். அவர் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய கச்சநத்தம் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

  மதுரை மத்திய சிறையில் 20 நாட்கள் சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவரது நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கடந்த மார்ச் 18-ம் தேதி மாத்தூர் அருகே வேலங்குளம் கண்மாயில் பிரசாந்த் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

  இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த 23 வயதான சிவன் மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார். சோழவந்தான் காவல்நிலையத்தில் கையெழுத்திட வசதியாக மதுரை கொடிமங்கலத்தில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்தார் சிவன் மூர்த்தி.

  செவ்வாய்க்கிழமை காலை தனது மாமாவின் தோப்பிற்கு சென்ற போது பின்தொடர்ந்து சென்ற கும்பல், சிவன் மூர்த்தியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிவன் மூர்த்தி உயிரிழந்தார்.

  பிரசாந்த் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் கொலை நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்துள்ள வாட்ஸ்ஆப் குரூப்பில், கொலையான பிரசாந்தின் அண்ணன் ஊர்காவலன் என்ற பெயரில் ஆடியோ ஒன்றை வந்தது.

  அதில், ‛‛திட்டமிட்டபடி முடித்துவிட்டதாகவும், சிவன் மூர்த்தியை கொலை செய்து ரத்தத்தை பிடித்து வந்து நினைவிடத்தில் தெளித்ததாகவும் கூறியுள்ளார்.

  இப்போது தனது தம்பி மகிழ்ந்திருப்பான் என்றும், தான் போலீசில் சரணடைய உள்ளதாகவும் அந்த ஆடியோவில் அவர் கூறியுள்ளார்.

  மற்றொரு ஆடியோவில், சந்தேகம் இருந்தால் தம்பியின் நினைவிடத்தில் சென்று ரத்தகறையை பார்த்துக்கொள்ளுமாறும் அவர் பேசியுள்ளார். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ஆடியோ குறித்து மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Murder