டிக்-டாக் மூலம் திருமணமான பெண்ணுடன் காதல்! குடும்பத்தின் எதிர்ப்பால் இருவரும் விஷம் குடித்த பரிதாபம்

டிக்-டாக் மூலம் அறிமுகமான காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற விபரீத சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

news18
Updated: June 25, 2019, 11:06 AM IST
டிக்-டாக் மூலம் திருமணமான பெண்ணுடன் காதல்! குடும்பத்தின் எதிர்ப்பால் இருவரும் விஷம் குடித்த பரிதாபம்
டிக் டாக்
news18
Updated: June 25, 2019, 11:06 AM IST
திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர், ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டை இலந்தை குளத்தை சேர்ந்த மரிய புஷ்பராஜ் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் ‘டிக்-டாக்’ செயலியில் நடிகர்கள் குரலில் பல்வேறு பாடல்கள் மற்றும் வசனங்களை பேசுவதுபோல் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

அதேபோல் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரும் தனது வீடியோக்களை ‘டிக்-டாக்’ செயலியில் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் இவர்களது நட்பு தொடர அது பின்னர் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து சந்தித்து பேசி, பழகி வந்துள்ளனர். புஷ்பராஜ், சங்கீதாவை ஆட்டோவில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சங்கீதாவுக்கு லாரி டிரைவர் ஒருவருடன்  ஏற்கெனவே திருமணமாகி, பெண் குழந்தை இருப்பது புஷ்பராஜுக்கு தெரியவந்தது.

மேலும் புஷ்பராஜுடனான காதல் காரணமாக சங்கீதாவின் கணவர், குழந்தையை எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்ட விவரமும் புஷ்பராஜிற்கு தெரியவந்துள்ளது.

இருந்த போதிலும் சங்கீதாவின் தொடர் வலியுறுத்தலாலும், அவர் மீது கொண்டிருந்த காதல் மோகத்தாலும் புஷ்பராஜ், காதலியை கரம்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக தனது பெற்றோரிடம் புஷ்பராஜ் பேசினார். ஆனால், அவர்கள் புஷ்பராஜை கண்டித்ததுடன், சங்கீதாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் மனமுடைந்த ஆட்டோ ட்ரைவர் புஷ்பராஜ் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி சங்கீதாவுக்கு தெரியவந்தது. அவர் நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மரியபுஷ்பராஜை சந்தித்து பேசினார். பின்னர் அவர் அருகில் இருந்து கவனித்து வந்தார். ஆனால் இதற்கு புஷ்பராஜின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சங்கீதாவை வெளியே செல்லுமாறு கூறினார்கள்.

இதனால் மனமுடைந்த சங்கீதா நெல்லை பேருந்து நிலையம் அருகில் விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார்.  இதைக்கண்ட புறக்காவல் நிலைய போலீசார், சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பெருமாள்புரம் மற்றும் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் அனைத்தும் தெரியவந்துள்ளது.
டிக்-டாக் மூலம் அறிமுகமான காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற விபரீத சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Also see...

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...