10% இடஒதுக்கீடு தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நாளை மறுநாள் மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

news18
Updated: July 6, 2019, 11:36 AM IST
10% இடஒதுக்கீடு தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
அமைச்சர் விஜயபாஸ்கர்
news18
Updated: July 6, 2019, 11:36 AM IST
மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டமியற்றியுள்ளது.

இதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 2ஆம் தேதி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி,  10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசி ஒரு மனதாக எடுக்கப்படும் முடிவே பின்பற்றப்படும் என்று  தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை மறுநாள் மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...