Home » News » Tamil-nadu » AMMONIUM NITRITE BROUGHT TO HYDERABAD FROM CHENNAI SKD ANB

சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட 181 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்

சென்னை மணலி வேதிக் கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வந்த அம்மோனிம் நைட்ரேட்டில் 181 மெட்ரிக் டன் ஏலம் விடப்பட்டு ஹைதராபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட 181 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்
பெங்களூரு எடுத்துச் செல்லப்படும் அம்மோனியம் நைட்ரேட்
  • Share this:
கரூரைச் சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2015-ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்த 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் இறுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கரூரைச் சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு அமோனியம் நைட்ரேட்டை வழங்க முடியாது எனவும் தேசப் பாதுகாப்பு கருதி உரிய அனுமதி சான்று பெற்றவர்களுக்கு இதை ஏலம் விட வேண்டும் எனவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 9 மாதங்களாக ஏல நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டு இருந்தது. லெபனானில் நடந்த சம்பவத்தை அடுத்து கடந்த 4 நாட்களாக சென்னை அடுத்த மணலியில் உள்ள சத்வா கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணியில் மத்திய. மாநில அரசு அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர்.


இணையதளத்தில் ஈ-ஆக்சன் முறையில் ஏலம் விடப்பட்டு அதை விற்பனை செய்யும் நடவடிக்கையிலும் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அந்த அடிப்படையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மொத்த அமோனியம் நைட்ரேட்டையும் விலைக்கு வாங்கியது. இதனையடுத்து சுங்கத்துறை, காவல்துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை  உள்ளிட்ட அதிகாரிகள் கண்கானிப்பில் பாதுகாப்புடன் 181 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் பத்து கண்டெய்னர் லாரிகளில் சென்னை மணலியில் இருந்து ஹைதராபாத்துக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது.

குறிப்பாக இந்த பத்து கண்டெய்னர் லாரிகளில் சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு எடுத்துச் செல்லும்போது 12 விதமான விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக நடுவில் தேவையில்லாமல் கண்டெய்னர் லாரியை நிறுத்த கூடாது. ஆட்களை ஏற்றக்கூடாது. வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடாது. வெடிக்கும் தன்மை கூடிய பொருட்கள் அருகில் வாகனத்தை நிறுத்த கூடாது. இரண்டு பாதுகாவலர்களுடன் தீயணைப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளோடு எடுத்துச் செல்ல வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஹைதராபாத்தில் உள்ள கிடங்கிற்கு சென்றவுடன், சம்பந்தப்பட்ட நிறுவனமானது சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் ஹைதராபாத் காவல்துறை ஆணையர் வருவாய்த்துறை, சுங்கத்துறை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே அமோனியம் நைட்ரேட் இருப்பின் விவரத்தை சுங்கத் துறை முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பறிமுதல் செய்தபோது 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் இருந்ததாகவும், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட போதும் 740 மெட்ரிக் டன் இருப்பதாகவும் சுங்கத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. ஆனால் சுங்கத்துறை ஏலம் விடுவது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் 697 டன் அமோனியம் நைட்ரேட் மட்டுமே ஏலத்தில் விடப்படுவதாக கூறப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 43 டன் மாயமானது தொடர்பாக சுங்கத்துறை தரப்பிலிருந்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை.
சுங்கத்துறை வட்டாரங்களில் 2015 வெள்ளத்தின் போது 43 டன் அம்மோனியம் நைட்ரேட் அடித்துச் செல்லப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. சுங்கதுறையின் முரணான விளக்கங்கள் தற்போது பூதாகரமாகியுள்ளது.
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading