லெபனானைப் போல இங்கே வெடிக்காது - சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சுங்கத்துறை விளக்கம்

சென்னை துறைமுகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ள 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்த நிலையில், சுங்கத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்

லெபனானைப் போல இங்கே வெடிக்காது - சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சுங்கத்துறை விளக்கம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: August 6, 2020, 1:33 PM IST
  • Share this:
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் ஆறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 130-க்கும் அதிகமானோர் பலியாயினர். சுமார் 4000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் இறப்பு சதவிகிதம் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக உலக நாடுகள் தங்களது நாட்டில் உள்ள துறைமுகங்களில் சேமித்து வைத்திருக்கும் வெடிக்கக் கூடிய வேதிப்பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை துறை முகத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக 740 மெட்ரிக் டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் சுமார் 35-க்கும் அதிகமான கண்டெய்னர்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள செய்தியானது சென்னைவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கடந்த 2015-ம் ஆண்டு கரூர் அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் உரிய ஆவணங்கள் இல்லாததால் இறக்குமதி செய்த சுமார் 740 டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள், வட சென்னையில் உள்ள துறைமுக கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை சுங்கதுறை அலுவலகம் சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் குறித்து விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது, சென்னையில் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத்துறை சொந்தமான வேதிகிடங்கில் பாதுகாப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மணலியில் உள்ள வேதிக்கிடங்கை சுற்றிலும் குடியிருப்புகள் இல்லை;  அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கடந்த ஆறு வருடமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்புடன் உள்ளதாகவும், மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இ- ஆக்சன் முறையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் ஏலம் விடும் நடவடிக்கையில் உள்ளதாகவும் சுங்கதுறை விளக்கம் தெரிவித்துள்ளது. 





அம்மோனியம் நைட்ரேட் பயன்பாடு என்ன?

அம்மோனியம் நைட்ரேட் என்பதன் வேதியியல் மூலக்கூறு பெயர் NH4NO3 ஆகும். இயற்கையாகவே கிடைக்கும் இதை, உலகம் முழுவதும் பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கையாகவும் உருவாக்கப்படுகிறது. அம்மோனியம் நைட்ரேட் பெரும்பாலும், விவசாயம் மற்றும் வெடி பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பயிர்களுக்கு தழைச்சத்து கிடைப்பதற்காக அம்மோனியம் நைட்ரேட் உரமாக பயன்படுத்தப்படும் நிலையில், கட்டிடங்களை இடிக்கவும், பாறைகளை உடைக்க மற்றும் கிணறுகள் தோண்டுவதற்கு தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கவும் அம்மோனியம் நைட்ரேட் உதவுகிறது. இருப்பினும், அம்மோனியம் நைட்ரேட் எளிதாக வெடிக்கும் ரசாயனம் இல்லை என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்மோனியம் நைட்ரேட்டை ஒரு அளவுக்கு மேல், ஓரிடத்தில் நீண்டகாலமாக வைத்திருந்தால், அது குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடும் எனக் கூறப்படுகிறது. அதில் இருந்து வெளியாகும் வெப்பமே, நெருப்பாக மாறும் என்றும், அம்மோனியம் நைட்ரேட்டில் இருந்து ஆக்சிஜன் வெளியாகும் என்பதால், அதுவே தீ கொழுந்துவிட்டு எரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். இது எரியும்போது சிவப்பு நிற புகையை வெளியிடும் என்றும், அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த புகை மனிதர்களை நொடியில் கொல்லும் திறனுடையது என்றும் எச்சரிக்கின்றனர்.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading