• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அமமுகவுக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை தேர்தல்களில் போட்டி இல்லை - டிடிவி தினகரன்

அமமுகவுக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை தேர்தல்களில் போட்டி இல்லை - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

  • News18
  • Last Updated :
  • Share this:
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள டிடிவி தினகரன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று சந்தித்து பேசினார்.

இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று கூறினார்.

அமமுகவுக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்றும் தினகரன் கூறியுள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: